கோவில்பட்டி அருகே தலை துண்டித்து பெயின்டர் படுகொலை

0
572

கோவில்பட்டி, ஜூலை 30-
கோவில்பட்டி அருகே காட்டு பகுதியில் தலை துண்டித்து பெயின்டர் கொலை செய்யப்பட்டார். பெண் தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு காட்டு பகுதியில் இன்று காலை 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரின் அருகில் மதுபாட்டில், கூல்ட்ரிங்ஸ் மற்றும் டம்ளர் ஆகியவை கிடந்தன. கைலி மற்றும் சட்டை அணிந்து காணப்பட்ட அவரை, இன்று காலை அந்த வழியாக வாக்கிங் சென்றவர்கள் பார்த்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


டிஎஸ்பி உதயசூரியன், இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையானவர் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த பொய்யாமொழி மகன் மதன்குமார் ((21) என்பதும், அவர் பெயின்டர் மற்றும் சமையல் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கொலை நடந்த இடத்தின் அருகில் குவார்ட்டர் பாட்டில், கூல்ட்ரிங்ஸ் மற்றும் டம்ளர் ஆகியவை பயன்படுத்தாமல் அப்படியே இருந்தது. எனவே மதன்குமாரை கொலையாளிகள் மது குடிக்க அழைத்து வந்து திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் எனவும், கொலையாளிகள் அவருக்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.


நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மதன்குமார், அதன்பிறகு வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் அவர், வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெண் தொடர்பு காரணமாக மதன்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here