வள்ளுவர் வழியில் சாதிபேதம் ஒழிக்க முயன்ற பாளை இன்ஸ்பெக்டர்

0
1616

வள்ளுவரை வைத்து மதச்சண்டை வளர்க்கும் அரசியலுக்கிடையே, அவர் மூலம் சாதி மனப்பான்மையை கிள்ளியெறியும் முயற்சியில் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் இறங்கியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
பாளையில் உள்ள இரு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்  டிக் டாக் மூலம் பகையை வளர்த்து இரு பிரிவாக மோதலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் 45 பேரை விசாரணைக்கு அழைத்து வந்து பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் அவர்கள் மீது வழக்குப்பதிந்தால் வாழ்க்கை பாழாகும் என்ற நல்லெண்ணத்தில் அறிவுரை கூறியதோடு, அவர்களை 1330 திருக்குறள் எழுதிவிட்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
எழுதும்போதாவது திருக்குறளை படித்தால் மாணவர்கள் சாதி, மதச் சழக்கில் விழமட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here