அரையிறுதியில் நுழைந்த சிந்து 3ஆவது பதக்கம் உறுதி

0
464

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இன்று ஜப்பானின் யமாகுச்சியுடன் மோதினார் சிந்து. உலக தரவரிசைப்படி சிந்து 7-ம் ரேங்க்கில் இருக்க, யமாகுச்சி 5-வது இடத்தில் இருக்கிறார். இதனால் சிந்து வெற்றிபெறுவாரா என்கிற சந்தேகமே எல்லோருக்கும் இருந்தது. ஆனால், யமாகுச்சியை நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறார் சிந்து.

யமாகுச்சிக்கு எதிரான ஆட்டத்தை மிகவும் நம்பிக்கையோடு எதிர்கொண்டார் சிந்து. இதனால் முதல் செட்டை 21-13 என கைப்பற்றினார். ஆனால், இரண்டாவது செட்டில் யமாகுச்சி அதிரடி காட்டினார். ஒரு கட்டத்தில் இரண்டாவது செட்டை கைப்பற்றும் வகையில் இரண்டு பாயின்ட் லீடிலும் இருந்தார் யமாகுச்சி. ஆனால், வெற்றி வேட்கை கொண்டு, ஆட்டத்தை மூன்றாவது செட்டுக்குள் கொண்டுபோய் விடக்கூடாது என அதிரடியாக ஆடிய சிந்து 22-20 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

அரையிறுதிக்குள் நுழைந்த சிந்து…
3ஆவது பதக்கம் உறுதி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here