தேர்வில் தோல்வி: ஆசிரியர் பயிற்சி மாணவி தற்கொலை

0
1235

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை அடுத்த சேதுராயன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகள் கண்மணி (வயது24). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, ஆசிரியர் பயிற்சி படித்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த தேர்வு முடிவில் கண்மணி 2 பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர்கள் அவரை சத்தம் போட்டுள்ளனர்.

இதில் மனமுடைந்த கண்மணி தற்கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த 25-ந்தேதி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய கண்மணியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here