மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சாப்டூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஏ. கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி வயிற்று வலி காரணமாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த சக்கரை (61) என்ற முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சக்கரையை போக்சோ சட்டத்தில் சாப்டூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.