தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். இதில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.









