புதுவையில் காங்கிரஸிலிருந்து கட்சி மாறி பாஜக வேட்பாளராக களம் கண்டு எம்எல்ஏ ஆன ஜான் குமார் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஆனால் ஆட்சி பங்கீட்டிலேயே பிரச்சனை என்பதால் பாஜக தலைமை அமைதி காத்தது.
இதையடுத்து டெல்லிக்கு பறந்து சென்ற ஜான்குமார் அங்கு மத்திய அமைச்சர், பாஜக பொதுச்செயலாளர் என சிலரை சந்தித்தார் ஆனாலும் மோடியை ஐயோ அமித்ஷாவையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இரு நாட்களாக டெல்லியில் தவமிருக்கும் ஜான்குமார் எப்படியும் அமித்ஷாவை மோடியையும் சந்தித்து அமைச்சர் பதவி கேட்பேன் கோரிக்கை நிறைவேறாவிட்டால் தவறான முடிவுக்குச் செல்ல மாட்டேன் ஆனாலும் மன வருத்தம் இருக்கும் என்று பேட்டியளித்தார்.
எப்படியோ, பதவி மோகத்தில் காங்கிரசுக்கு துரோகம் செய்தவர், இப்போது அதே ஏக்கத்தில் தவிக்கிறார்.














