ஆற்காடு அருகே சாமி ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்டவரை தட்டிக் கேட்டவர் குத்திக்கொலை

0
1012

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பகுதியில் நேற்று ஆடி செவ்வாய் முன்னிட்டு முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது

இத்திருவிழாவில் மாலை அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா கொண்டு செல்லப்பட்டுள்ளது அப்போது அதே பகுதியை சேர்ந்த கிரிவாசன்(30) என்பவரும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் மதுபோதையில் சாமி ஊர்வலம் முன்பு குத்தாட்டம் போட்டுள்ளனர் இதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தட்டிக் கேட்டுள்ளனர்

இதனால் ஆத்திரமடைந்த குடிபோதையில் இருந்த நபர்கள் கையில் வைத்திருந்த மதுபானபாட்டிலை உடைத்து சரமாரியாக தாக்கினர் இதில் அப்பகுதியை செர்ந்த நாகேந்திரன் மற்றும் ரகுவரன் ஆகிய இருவரையும் மதுபான பாட்டிலால் குத்தி காயம் ஏற்படுத்தியுள்ளன உடனடியாக அப்பகுதி சேர்ந்தவர்கள் நாகேந்திரன் மற்றும் ரகுவரன் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையான எஸ்எம்எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் பின்பு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் உயிரிழந்தார்

மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆற்காடு கிராமிய போலீஸார் சண்டைக்கு காரணமாக இருந்த கிரிவாசன் மற்றும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அவர்களது நண்பர்களான அன்பரசு (35)கேசவன்(36) ஹேம பிரசாத் (35)ஹரிஷ் (29)ஆகிய 5 நபர்களையும் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here