பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு கடத்திய ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்

0
1143

சென்னை அடுத்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அரிசி குடோனில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 20 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அதxனைத் தொடர்ந்து பொருட்களை ரூபாய் 7 லட்சத்து 48 ஆயிரத்து 500 போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குடோனின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குட்கா பொருட்கள் அனைத்தும் பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்த பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தமிழக போலீசார் பெங்களூரிலிருந்து குட்கா பொருட்களை தமிழகத்திற்கு அனுப்பி வைத்த நபர்கள் குறித்தும், இது போல தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here