கா்நாடகம் மாநிலம், யஷ்வந்த்பூரில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இன்று முதல் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் யஷ்வந்த்பூரில் இருந்து இரவு 8.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்-07395) மறுநாள் பிற்பகல் 1.10 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.
இதேபோல,நாளை முதல் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, திங்கள்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் – 07396) மறுநாள் காலை 9.30 மணிக்கு யஷ்வந்த்பூரை சென்றடையும்.
இந்த ரயிலானது, பானஸ்வாடி, தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.