மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணிக்கு 161 இடங்கள் இருந்தும் முதலமைச்சர் பதவி ஆட்சியமைக்க முடியவில்லை.
இதனால் சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.
தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்தும், காங்கிரஸ் முடிவு அறிவிக்க தாமதமானதால் சிவசேனா அவகாசத்துக்குள் பலத்தை நிரூபிக்க முடியவில்லை. இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டது. ஆனால் கவர்னர் அதை நிராகரித்துவிட்டார்.
தேசியவாத காங்கிரசை ஆட்சியமைக்க அழைத்தும் மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுக்க அவகாசம் கேட்டது. இதனால் மகாரடிஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை எந்த கட்சியாலும் காட்ட இயலவில்லை என கவர்னர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதுகுறித்து மத்திய அமைச்சரவையில் விவாதம் செய்து குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததால் குடியரசு தலைவர் ஆட்சி அமலானது.













