துபையிலிருந்து பேண்டில் மறைத்து கடத்தி வந்த ரூ.19 லட்சம் தங்கம் பறிமுதல்

0
494

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.

விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சென்னையை சோ்ந்த ஜெய்னுலாப்தீன் (60) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது பேண்ட்டில் ரகசிய அறை வைத்து தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா். ரூ. 19 லட்சத்தி 78 ஆயிரம் மதிப்புள்ள 465 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெய்னுலாப்தீனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here