இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கு பிடிவாரண்ட்

0
489

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் முகமது ஷமி. இவரின் மனைவியான ஹசின் ஜஹான் கடந்த ஆண்டு தனது கணவர் மற்றும் கணவரின் சகோதரர் மீது குடும்ப வன்முறை பிரிவின் கீழ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு மேற்குவங்க மாநிலம் அலிபோர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முகமது ஷமி மற்றும் அவரின் சகோதரர் ஹசித் அகமது ஆகியோர் மீது கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும் இருவரும் 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், இல்லையென்றால் கைது நடவடிக்கை என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது ஷமி தற்போது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இந்த டெஸ்ட் தொடர் நாளையுடன் முடிவடையுள்ளதால், அதன் பின் முகமது ஷமி நாடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here