போபால் மருத்துவமனையில் தீ : 4 குழந்தைகள் பலி

0
761


போபாலில் உள்ள கமலா நேரு அரசு குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை மையத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. முதல் கட்ட விசாரணையில் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது உறுதியாகியுள்ளது.

மூன்றாவது மாடியில் ஏற்பட்ட இத்தீ விபத்தில் குழந்தைகளும் அவர்களை பராமரித்த பெண்களும் சிக்கிக்கொண்டனர்.தீயணைப்பு வீரர்கள் போராடி சுமார் 2 மணி நேரம் தீயை அணைத்துள்ளனர். வேதிப்பொருட்கள் இருந்த காரணத்தால் தீயை அணைப்பதற்கு சிரமம்ப்பட்டுள்ளனர்.
தீ விபத்து காரணமாகவும், புகையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 4 குழந்தைகள் இதில் பலியானார்கள். இன்னும் சில குழந்தைகளுக்கு தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. 4 பெண்களும் தீ காரணமாக காயம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here