தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையம் தெருவை சேர்ந்த அருணாதேவிக்கும் (27/15), திருநெல்வேலி சிவகிரியை சேர்ந்த அல்போன்ஸ் (எ) அர்ஜூனன் மகன் ஜீலிபாரத் (42) என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அருணாதேவி விளாத்திக்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 07.11.2015 அன்று ஜூலிபாரத் தனது மனைவியை பார்க்க விளாத்திகுளத்திற்கு வந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில், மனைவி அருணாதேவியை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூலிபாரத்தை கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிச்சையா என்பவர் புலன் விசாரணை செய்து 24.03.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் ஜூலிபாரத்துக்கு ஆயுள் தண்டனையும்,1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிச்சையா , நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சுபாஷினி, விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர்கள் ஏட்டுராஜ் , ராமன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.








