நடந்து முடிந்தசட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு 4 பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் சென்றிருக்கிறார்கள்.
ஏற்கனவே, தேர்தலின் போது பாஜகவினர் வாக்குக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கின்றனர்,தேர்தலில் தில்லுமுல்லு செய்கின்றனர் என்றெல்லாம் குற்றச்சாட்டு எழுந்தது அதைப் பாஜக மறுத்து வந்தது.
இந்நிலையில் ‘சூம் ‘செயலி மூலம் நண்பர்கள் நடுவில் பேசிய நடிகர் எஸ்வி சேகர், பாஜக மீதான தனது விசுவாசத்தை புலப்படுத்தினார்.
மேலும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளருக்கு தலா 13 கோடி ரூபாய் தேர்தல் செலவுக்கு கட்சியால் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.அதற்கு யாரும் கணக்கு வைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு வேட்பாளர் 30.8 லட்சம் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் செலவழிக்க வேண்டும் என்ற தொகை வரம்பு இருக்கும் நிலையில், ஒரு நாட்டின் ஆட்சியை நடத்துகின்ற, தேர்தல் ஜனநாயகத்தை பராமரிக்க வேண்டிய கட்சியே தொகுதிக்கு 13 கோடி ரூபாய் கொடுத்தது என்றால், அதன் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கத் தவறியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எஸ்வி சேகரின் பேச்சு வீடியோ
வலைதளங்களில் பரவிவருகிறது. இதோ அந்த வீடியோ :













