பாளை. சிறையில் முயன்ற கைதி அங்கு இருந்த சக கைதிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்சிறை வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு சிறை அதிகாரிகள் உடந்தையாக
இருந்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும் முத்து மனோவின் உடலை வாங்காமல் கடந்த 55 நாட்களாக அவரது உறவினர்களும் ஊர்க்காரர்களும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் முத்து மனோவின் ஊரான நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பு வாகை குளத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து பாளை.மத்திய சிறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு மண்ணெண்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர் அவரை அருகில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.