ஜம்மு – காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் சிலர் சந்தித்தனர்.
டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், உள்துறை இணையமைச்சர நித்யானந்த் ராய் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது, இன்னும் 20 முதல் 25 நாட்களுக்குள் காஷ்மீர் முழுவதும் செல்போன் சேவை மற்றும் இணையசேவை மீண்டும் செயல்படத் தொடங்கும் என பஞ்சாயத்து தலைவர்களிடம் அமித் ஷா உறுதி அளித்தார்.













