தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பிரபல திருடன் கொடிமலர் என்பவருக்கு சாத்தான்குளம் நீதிமன்றம் 9 திருட்டு வழக்குகளில் ஒவ்வொரு வழக்குகளுக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிப்பு. நீதிபதி கலையரசி ரீனா உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பிரபல திருடனான கொடிமலர் என்பவர் மீது சாத்தான்குளம், மெய்ஞானபுரம், தட்டார்மடம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களிலும் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இவர் மீது பதியப்பட்டுள்ள 9 திருட்டு வழக்குகளுக்கும் போதிய சாட்சிகள் நிலை நிறுத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சாத்தான்குளம் மேஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி கலையரசி ரீனா கொடிமலருக்கு 9 வழக்குகளில் ஒவ்வொரு வழக்குக்கும் தலா ஒன்பது ஆண்டு க தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மெய்ஞானபுரம் பகுதியில் நடந்த மற்றொரு திருட்டு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.