நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த ஒருவார காலமாக நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 பேர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . இந்நிலையில் இன்றைய நிலவரப்படி. மாவட்ட அளவில் ஓரே நாளில் 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாநகர் பகுதியில் 436 பேருக்கும் , அம்பாசமுத்திரம் பகுதியில் 43 பேருக்கும் மானூர் பகுதியில் 54 பேருக்கும் , நாங்குநேரி பகுதியில் 25 பேருக்கும் பாளையங்கோட்டை பகுதியில் 87 பேருக்கும் , பாப்பாக்குடி பகுதியில் 17 பேருக்கும் , ராதாபுரம் பகுதியில் 21 பேருக்கும் , வள்ளியூர் பகுதியில் 51 பேருக்கும் , சேரன்மகாதேவியில் 58 பேருக்கும் , களக்காடு பகுதியில் 70 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.









