மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக புதிய பள்ளிக்கூடம் திறப்பு..!

0
290

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி அருகே nnஉள்ள அங்கமங்கலம் ஊராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே மிகுந்த சிதிலமடைந்து ஓட்டு கட்டிடமாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஜமாத்தாரர்கள் நாலுமாவடி இயேசு

விடுவிக்கிறார் ஊழியத்தின் நிறுவனர் சகோதரர் மோகன் சி லாசரசிடம் இது குறித்து தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த வருடம் நாமே திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து சகோதரர் மோகன் சி லாசரஸ் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசின் பங்களிப்பு தொகையாக 20 லட்சம் சேர்த்து மொத்தமாக 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கூட கட்டப்பட்டு இன்று திறப்பு விழா காணப்பட்டது. இந்த விழாவின்போது இந்து கிறிஸ்டின் மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முன் மதத்தினரும் கலந்து கொண்டு பள்ளிக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கருவேலம்பாடு கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தில் நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் 18.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உயர்நிலை மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சகோதரர் மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அம்பலசேரி கிராமத்தில் உள்ள ஊராட்சியின் நடுநிலைப் பள்ளியில் உள்ள கட்டிடமானது ஓட்டு கட்டிடமாக இருப்பதால் அதனை சீரமைத்து தர வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் ஏற்கனவே சகோதரர் மோகன் சி லாசரஸிடம் தெரிவித்திருந்த நிலையில் அதனை சீரமைத்து கொடுக்கப்பட்டது. இதனை இன்று சகோதரர் மோகன் சி லாசரஸ் மற்றும் மும்மதத்தினரும் கலந்து கொண்டு வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here