சென்னை முகப்பேர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் “உயிர்கோள அடர் வனம்” திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,’
அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம். மிக விரைவில் முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளமாக மாறும்.
நீட் தேர்வை பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழகத்திம் நிலைப்பாடும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடும். அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியாரும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த முன்வர வேண்டும்
தமிழ்நாட்டில் 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் பற்றி முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின், உரிய முடிவு எடுக்கப்படும். பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தைரியமாக முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதி தேர்வில் குழுப்பம் உள்ளது என்றும் அதில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம். கொரோனா கட்டுக்குள் வந்த பின், தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தை, TNPSC யுடன் இணைக்கும் திட்டம் இல்லை என்றார்.













