மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் 3ஆவது சுற்றில் உலகின் நம்பர் 2 வீராங்கனை நயோமி ஒசாகாவை 42ஆம் ரேங்க் வீராங்கனையான மார்கெடா வோண்ட்ருசோவா வீழ்த்தினார்.
ஏற்கெனவே உலகின் நம்பர் 1 ஆக இருந்த ஆஷ்லி பார்டியும் வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் குத்துச்சண்டையில் வால்டர் வெயிட் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லவ்லினா போர்காய்ன்.
3-2 என்ற புள்ளிக் கணக்கில் ஜெர்மனியின் நதீன் அபெட்சை அவர் வீழ்த்தினார்
அடுத்த போட்டியில் வென்றால் பதக்கம் உறுதி செய்யப்படும்.














