34 லட்சத்துக்கு விலைபோன காங்கேயம் மாடுகள்

0
659

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் , நத்தக்காடையூர் அருகே , பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை , ஞாயிறு தோறும் நடக்கிறது . திருப்பூர் மட்டுமின்றி , கோவை , ஈரோடு , கரூர் , திண்டுக்கல் , நாமக்கல் , திருச்சி , சேலம் மாவட்ட விவசாயிகளும் , மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் . தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் , மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர் . இடைத்தரகர் யாரும் இன்றி மாடுகளை நேரடியாக விலைபேசி வாங்கலாம் .

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் , நேற்று சந்தைக்கு மாடுகள் , காளைகள் , கிடாரி மற்றும் காளை கன்றுகள் என 101 கால்நடைகள் வரத்தாகின . மாடுகள் 20 ஆயிரம் ரூபாய் முதல் 82 ஆயிரம் ரூபாய் வரை விற்றன . கிடாரி கன்று 12 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்றது . மொத்தம் 70 கால்நடைகள் 34 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here