விவசாய நிலத்தில் பதுக்கிய 14 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

0
702

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று லோடு வேனில் 3500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் அவர்களின் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை மது அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் யுவராணி மற்றும் உதவி ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்

விசாரணையில் கலவை கிராமம் அடுத்த செய்யாத்துவண்ணம், பத்மா நகர் அருகே விவசாய நிலத்தில் சாராயம் பதுக்கி வைத்துள்ளதாக ராணிப்பேட்டை மது அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து ஆய்வாளர் யுவராணி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்

சோதனையில் விவசாய நிலத்தில்சுமார் 14000 எரிசாராயம் 395 கேன்களில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து கலவை போலீசார் உதவியோடு 14 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்த
அமலாக்க பிரிவு போலீசார்,

விவசாய நிலத்தின் காவலாளியான வினோத் என்பவரை பிடித்த போலீசார் எரிசாராயம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது எந்த உபயோகத்திற்காக கொண்டுவரப்பட்டது இதன் பின்னணியில் யார் யார் உள்ளார்கள் என்று விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here