ஆடத்தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களில் வட இந்தியர்கள் அதிகமாக வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் மதுரை, திருச்சி ரயில்வே கோட்டங்களில் சுமார் 80{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} பேர் வட மாநிலத்தவர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால், தமிழகத்தவர் வேலை வாய்ப்பு பறிபோகிறது. தமிழ்நாடு அரசின் வேலைகளிலும் இந்தியர் எவரும் சேரலாம் என விதி விலக்கு அளித்து தமிழக அரசு கையாலாகத்தனத்தை காட்டியுள்ளது.
இவ்வாறு பிற மாநிலத்தவரே தமிழக பணியிடங்களை நிரப்ப வழிவகுத்துவிட்டு, தமிழக இளைஞர்களுக்கு போதிய திறமையின்மையால் மற்ற மாநிலத்தவர்கள் பணி பெறுவதாக அமைச்சர் ஓஎஸ் மணியன் பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.













