மூட்டை முடிச்சு போல் ஆம்புலன்சில் திணிக்கப்பட்ட 50 நோயாளிகள்

0
1171

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பொன்னமங்களத்தில் கொரானா பெருந்தொற்றால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதி உள்ள 10க்கும் மேற்பட்டோர் கொரானா தொற்றால் உயிரிழந்த நிலையில், சுகாதாரத் துறையினர் உத்தரவின் பெயரில் அக்கிராமம் மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரானா பரிசோதனை மேற்கொண்டத்தில், 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தும், அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவித்தனர்.


மேலும், கொரோனாவால் பாதிக்கபட்டோரை முகாமிற்கு அழைத்து செல்ல அரசு ஆம்புலன்ஸ் வராத நிலையில், ஏ.ஏஸ்.என்ற தன்னார்வல தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகம்

2 ஆம்புலன்ஸ்கள் பொண்ணமங்கலம் கிராமத்திற்கு அனுப்பிவைத்தது . அந்த ஆம்புலன்சில் சுகாதாரத்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை பெயர்களை வாசித்து ஒரே வாகனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொற்று பாதித்தவர்களை அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னும் நீண்ட நேரம் அரசு வாகனம் வராததனால் அப்பகுதி மக்கள் விரக்தி அடைந்தனர். இதனால் மேலும் ,2 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்த சுகாதாரத்துறையினர் 2 ஆம்புலன்ஸ் களில் 50 பேரை கொண்டு சென்றனர்.

அப்பகுதியில் உள்ள சில இளைஞர்கள் இந்த பரிதாப காட்சியை செல்போனில் படம் பிடித்து

சமூக வலைதளங்களில் பதிவிட்ட னர்.தற்போது அந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here