ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டப்படி மாநிலம் முழுவதும் 11,158 கிராம செயலகங்கள் மற்றும் 3,786 வார்டு செயலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலகங்களில் பணியாற்ற 1,26,728 பேர் பொதுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பணி நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சி விஜயவாடாவில் இன்று நடைபெற்றது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ‘கிராம செயலகங்களின் மூலம் லஞ்சம், ஊழல் போன்ற பிரச்சனைகள் இன்றி மக்களின் குறைகள் 3 நாட்களுக்குள் தீர்க்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் வெறும் நான்கு மாதங்களுக்குள் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நிரந்தரமான அரசாங்க வேலை கிடைத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் தேர்வுகளுக்குரிய மாதமாக இருக்கும். மாநில அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடைபெறும்’ என்று அறிவித்தார்.













