கோவை அருகே விவசாயி தாக்கப்பட்ட சம்பவத்தில், வி.ஏ.ஓ. மற்றும் கிராம உதவியாளர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம், அன்னுார் அருகே ஒட்டர்பாளையம், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பட்டாவில் பெயர் நீக்கம் குறித்து கேட்கச் சென்ற விவசாயி கோபால்சாமிக்கும், வி.ஏ.ஓ., கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபால்சாமி காலில் விழுந்து கிராம உதவியாளர் முத்துசாமி கதறி மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியானது.
இதையடுத்து, கோபால்சாமி மீது வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.முழுமையான வீடியோ வெளியான பிறகே கோபால்சாமியை கிராம உதவியாளர் முத்துசாமி தாக்கியது தெரிய வந்தது. விவசாய அமைப்பினர், வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டங்கள் நடத்தினர்.விவசாயி கோபால்சாமியை தாக்கி, தகாத வார்த்தையால் பேசியதாக கிராம உதவியாளர் முத்துசாமியும், உடந்தையாக இருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியும், நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அன்னூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.