ஆண்,பெண் வீரர்களுக்கு சம பரிசு – கட்சி நடத்திய கபடி போட்டியில் கனிமொழி யோசனை ஏற்பு

0
403

:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் திசையன்விளையில், இந்திய அளவிலான மின்னொளி கபடிப் போட்டியின் மூன்றாம் நாள் விளையாட்டை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தொடங்கி வைத்தார்.

போட்டியில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பரிசுத்தொகை ரூ லட்சம் வரை வித்தியாசப்பட்டது.
இரு பாலருக்கும் ஒரே பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்று கனிமொழி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வழங்க சம்மதித்தனர்.
அதைத்தொடர்ந்து பேசிய கனிமொழி,’ஆண் பெண் சமத்துவத்தை நாங்கள் இங்கே கடைப்பிடிக்கிறோம்’ என்றார்.

வீராங்கனை ஒருவர் இந்தியில் கேள்வி எழுப்ப, ‘ மன்னிக்கவும், நான் டெல்லியில் இருக்கும்போது, எனக்கு ஹிந்தி புரியவில்லை, உங்களால் ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியும்’ என்றார்.

நிகழ்ச்சியில், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் டிபிஎம் .மைதீன்கான், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் , நெல்லை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளரான சபாநாயகர் அப்பாவுவின் மகள் அலெக்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here