திமுக சார்பில் ரூ.1 கோடி மற்றும் எம்பி எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் கொரோனா நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்ட சூழலில், அதிமுக தலைவர்களும் அது போன்று நிதி அளிக்க ஆலோசித்தது குறித்து அப்போதே தெரிவித்திருந்தோம்
இந்நிலையில் தற்போது ரூ ஒரு கோடி மற்றும் எம்பி எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக அதிமுக அறிவித்துள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கையொப்பமிட்டு இதை அறிவித்துள்ளனர்.












