சப்பாத்திக்கு உப்பு _ பத்திரிகையாளர் மீது வழக்கு

0
849

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூரி கிராம அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், சிறுமிகளுக்கு மதிய உணவில் தினமும் ஒரு சப்பாத்தியும் அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நீதிபதி அனுராக் பட்டேலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணைக்கு உத்தரவிட்டார். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் இதற்கு காரணமான ஆசிரியர் மற்றும் மதிய உணவு வழங்கும் நிர்வாகி ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதனால் இந்த விவகாரத்தை வெளியில் கொண்டுவந்த பிரவீண் ஜெய்ஸ்வால் மீது ஆத்திரமடைந்த உத்தர பிரதேச அரசு, அவர் மீது பிணையில் வரமுடியாத வழக்குகளை புனைந்துள்ளது. இதற்கு இந்திய அளவில் பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here