நெல்லை டவுன் அருகேயுள்ள தென்பத்து முப்பிடாதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஜெகநாதன் (40), லாரி டிரைவர். இவருக்கும்,இவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறுக்காக கைது செய்யப்பட்டார்
. ஜாமினில் வெளியே வந்த ஜெகநாதன் இன்று மாலை டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்தார். அப்போது தென்பத்து பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், ஜெகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வாலிபர், அங்கிருந்த இரும்பு கம்பியால் ஜெகநாதனை தாக்கினார். இதில் ஜெகநாதன் அந்த இடத்திலேயே இறந்தார். நெல்லை சந்திப்பு போலீசார் கொலையான ஜெகநாதனை உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
நெல்லை மாநகர (மேற்கு) காவல் துணை ஆணையர் கீதா டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று அங்குள்ள ‘சிசிடிவி’ பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் தென்பத்து பகுதியை சேர்ந்த வெங்கடேஷை(29)பிடித்து விசாரிக்கின்றனர்.









