சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்ககோரி தரங்கம்பாடி அருகே சந்திரப்பாடி கிராமத்தில் 3ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.
சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் படிக்க அனுமதிக்காவிட்டால், மீன்பிடி விசைப் படகை கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது,
40 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணி அளவு கொண்ட ரால் இழுவை வலைகளை பயன்படுத்தக்கூடாது,
இறகு பகுதியில் இழுக்கப்பட்ட நிலையில் 75 மில்லி மீட்டருக்கு குறுக்கு முனையில் இழுக்கப்பட்ட நிலையில் 40 மில்லி மீட்டருக்குக் குறைவான கன்னி அளவு கொண்ட மீன் இழுவை வலைகளை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 21 வகையான சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்கிரா என அவர்கள்்் கருத்து தெரிவிக்கின்றனர.

ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை கையில் ஏந்தியவாறு சந்திர பாடி மீனவ கிராமத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் நடை பயணமாக வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளனர்.

மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்த ராஜ் தலைமையில நிறுத்தி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கை நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று கூறி தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.















