சாத்தான்குளம் அருகே உள்ள கோமாநேரி குளம் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட 16 பெரிய குளங்களில் ஒன்று. இந்த பருவ மழைக்கு குளம் இரு முறை மறுகால் போனது.
கடந்த இரு நாட்களாக பெய்த கன மழை காரணமாக கோமானேரி குளத்தில் இருந்து அதிகப்படியான வெள்ள நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் கூவண்கினறு ,கோமானேரி பகுதியில் தாழ்வான இடத்தில் வசிக்கும் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக,வெள்ள நீர் சீராக வெளியேறும் வகையில் கூவண்கிணறு ஊரின் மையப்பகுதியில் வட்டாட்சியர்,காவல் ஆய்வாளர் முன்னிலையில் நெடுஞ்சாலை தோண்டப்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.







