குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்: களக்காடு பரிதாபம்

0
878

 

நெல்லை மாவட்டம் களகாட்டில் மனநலம் பாதித்த சங்கரி என்ற பெண் தனது இரு குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொலை செய்துள்ளார்.
களக்காடு ராஜாத்திபுரம் தெற்கு தெருவில் வசிக்கும் சங்கரியின் கணவர் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். திருமணத்துக்கு முன்பே சங்கரி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். திருமண வாழ்க்கைக்குப் பின் ஓரளவு தேறியுள்ளார். இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்கள் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.


இந்நிலையில், இன்று தனது குழந்தைகளான 3 வயதுடைய முத்து வர்ஷினி, 4 மாத குழந்தையான முத்து அஜித் ஆகியோரை தண்ணீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். சாகாத நிலையில் முத்து வஷினி கழுத்தை நெரித்துள்ளார்.
இந்த துயர சம்பவம் குறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here