பணகுடி போலீசார் மத மோதலை உருவாக்குவதாக குற்றச்சாட்டு

0
992

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வீரபாண்டியபுரம் கிறிஸ்தவ ஆலயத்தின் கதவை பூட்டிய நபர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்றும், காவல் நிலையம் ஓரு தலைபட்சமாக செயல் படு வதாகவும் ஊர் பொதுமக்கள் பணகுடி காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட் டனர்.

நேற்று காலை இது தொடர்பாக மனு கொடுக்க வந்த நிலையில் போலீசார் அதை எதிர் தரப்பினருக்கு வாட்ஸ்அப் மூலம் தெரியப்படுத்தியதாகவும், அதனால் பதட்டமான சூழ்நிலை உருவானதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இறுதியாக போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கோயிலைப் பூட்டியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here