சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இளமனூரில் டேவிட் என்ற இளைஞர் மூளைக்கட்டியால் அவதிப்பட்ட நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போதிய பணம் இன்றி கஷ்டப்பட்டார.
அவரது அறுவை சிகிச்சைக்கு இளமனூரைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து குட் பார் இளமனூர் மற்றும் சேது பட்டாளம் என்ற அமைப்பின் மூலம் ரூ.2,50000 ஐ வசூல் செய்து டேவிட் என்ற இளைஞரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் கொடுத்தனுப்பி அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வைத்தனர்.
கொரானா ஊரடங்கிலும் வேலையின்றி வருமான மின்றி தவித்து வரும் இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட இளைஞருக்கு உதவிய இச்சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.