திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிவாரண நிதி ரூபாய் 2500ல் 500 ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு மீதியை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சமூக ஆர்வலரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான ஒருவர் அங்கு சென்று விளக்கம் கேட்டார். செலவுக்காக பணத்தை பிடித்தம் செய்வதாக வட்ட வழங்கல் அலுவலர் கூறினார். அப்படியென்றால் ரசீது கொடுங்கள் என்று சமூக சேவகர் மடக்க, வட்ட வழங்கல் அலுவலரும் உதவியாளரும் அசடு வழிந்தனர். இதோ அந்த அசடு வழியும் வீடியோ.














