CBE.17.07.21.N3.FP
கோவை,
பெண்களுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் முன்பின் தெரியாத நபரிடம் இருந்து தங்கள் செல் போனுக்கு ஆபாச வீடியோக்கள், தகவல்கள் வருவதாக பெண்கள் புகார் அளித்து இருந்தனர்.இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.அதில்
உடுமலைப்பேட்டையில் உள்ள கணக்கன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (39) என்பவர் பிடிபட்டார். இவா் அப்பகுதியில் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் இவா் இணையதளத்தில் சேவை தொடா்பான விளம்பரங்கள், தகவல்கள் அடங்கிய பக்கங்களில் இருந்து பெண்களின் செல்ஃபோன் எண்களை எடுத்து அவா்களுக்குத் தவறான குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.
இது குறித்து கோவை மாநகர இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காா்த்திகேயனை நேற்று கைது செய்தனா். விசாரணையில் அவா் கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள் உள்ளிட்ட பலருக்கு பாலியல் தொல்லை அளித்திருப்பது தெரியவந்தது.