‘மிஸ்டு’காலால் ‘மிஸ்’ ஆன மனைவியை கண்டுபிடித்து தர கணவர் கோரிக்கை

0
534

கோவை சூலூர் அருகே உள்ள பாரதி புரத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதி உள்ள ஒரு மில்லி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.

இந்த நிலையில் இளம் பெண் செல்போனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு மிஸ்டு கால் வந்தது. அதில் ஒரு வாலிபர் பேசினார். பின்னர் செல்போன் மூலமாக ரெண்டு பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இரண்டு பேரும் அடிக்கடி செல்போனில் பேசி பேசிவந்தார்

கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அடிக்கடி யாருடன் செல்போனில் பேசி வருகிறாய் என கேட்டார். தனது மனைவியை கண்டித்தார். பின்னர் இளம் பெண்ணின் கணவர் இரவு பணிக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த தனது மனைவி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மனைவியை அக்கம்பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here