பாளையங்கோட்டை குலவணிகர்புரம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரே உள்ள மின்கம்பம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சரக்கு ஏற்றிய லாரியை மோதி இரு துண்டாக முறிந்தது. இதையடுத்து மின்வாரிய அலுவலர்கள் வந்து இரு கயிறுகளை கட்டி அந்த கம்பத்தை நிறுத்தி உள்ளனர். ஆனாலும், எப்போதும் சரிந்து விழும் நிலையிலேயே கம்பம் உள்ளது.
உடனடியாக கம்பத்தை மாற்றி விடுவதாக உறுதியளித்து சென்ற மின்வாரிய அலுவலர்கள் நான்கு நாட்கள் ஆகியும் வராததால் எப்போது யார் மீது, எந்த வாகனத்தின் மீது சாயுமோ என்ற நிச்சயமற்ற நிலையில் கம்பம் நின்று கொண்டிருக்கிறது.

உடனடியாக மாற்று மின் கம்பம் நிறுவாவிட்டால் ஏற்படும் இழப்புகளுக்கு மின்வாரியமே பொறுப்பேற்க நேரிடும்.








