காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் ப சிதம்பரம் பேசும் போது காஷ்மீர் விவகாரத்தில் நேருவுக்கும் படேலுக்கும் ஒத்த கருத்தே இருந்தது. எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது அதிமுக அரசு.
தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து சேர, சோழ, பாண்டிய நாடு என பிரித்தால் மக்களின் நிலை என்ன.
காங்கிரஸில் ஏற்பட்டுள்ள சலசலப்பையும் கலக்கத்தையும் நினைத்து நான் வருந்தாத நாள் இல்லை. மதசார்பின்மை பற்றி விவாதம் எழுந்த போது காங்கிரஸில் சலசலப்பும் கலக்கமும் தற்போது இருக்கிறது என்றார்