ராகுல்காந்தி கன்னத்தில் முத்தமிட்ட வாலிபர்

0
534

கேரள மாநிலம் வயநாட்டில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கன்னத்தில், இளைஞர் ஒருவர் முத்தமிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கேரளாவில் அண்மையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இந்த நிலையில் தனது மக்களவைத் தொகுதியான வயநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 11ந்தேதி முதல் 14ந்தேதி வரை வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்களை சந்தித்து வெள்ள மீட்பு பணிகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில், வயநாடு தொகுதிக்கு மீண்டும் அவர் சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் முதல் 3 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து மக்களை சந்தித்த அவர், காரில் அமர்ந்தவாறு ஆறுதல் தெரிவித்து கைக்குலுக்கினார்.

அப்போது ராகுல் காந்தியுடன் கைக்குலுக்கிய இளைஞர் ஒருவர், திடீரென அன்பு மிகுதியில் அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here