அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்கள் ஆகஸ்ட் 14க்குள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியிருந்தது. அவ்வாறு செலுத்தாதவர்கள் ரிசல்ட்டை வெளியிடவில்லை. இதையடுத்து சேலத்தை சேர்ந்த இரு மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், ‘செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்ககூடாது’ என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












