சென்னை துரைப்பாக்கம் சோழிங்கநல்லூர் பரமேஸ்வரன் நகரில் மோகன் என்பவர்க்கு சொந்தமான பெயிண்ட் கடை உள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாட்டால் இரவு 8 மணிக்கு பெயிண்ட் கடையை மூடிவிட்டு வழக்கம்போல் மோகன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பெயிண்ட் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்துவிட்டு எரிந்து பக்கத்து கடைக்கும் தீ பரவியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்
தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சிறுசேரி, துரைப்பாக்கம், மேடவாக்கம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பெயிண்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் அருகில் உள்ள மற்றொரு கடைக்கும் தீ பரவியது.
தீ விபத்து காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த செம்மஞ்சேரி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













