அக். 03-
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டம் தேர்வு செய்யப்ப்பட்டுள்ளது. சிறந்த மாவட்டமான திருநெல்வேலிக்கு இதற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் ஒன்றான சுகாதார வளாகம் மற்றும் சமுதாய பொதுக் கழிப்பறைகளின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பாக சிறந்த மாவட்டங்களுக்கு விருது வழங்குவதற்கான போட்டியில் தேசிய அளவில் திருநெல்வேலி மாவட்டம் முதல் மாவட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, காணொலிக் காட்சி முறையில் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் விருதை வழங்கிப் பாராட்டினார். திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.









