செங்கல்பட்டில் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இருவர் மீது அங்கு வந்த கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டு வீசியது. பின்னர் அரிவாளால்அடுத்தடுத்து அவர்களை வெட்டி சாய்த்தது.
வெட்டிக் கொல்லப்பட்டவர்கள் கார்த்திக் மற்றும் மகேஷ் என தெரியவந்துள்ளது. முன்பகை காரணமாக கொலை நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












