கத்தியை காட்டி பணம், செல்போன் பறித்த கணவன், மனைவி கைது

0
942


கோவை ஆர்எஸ் புரம் லாலி ரோடு பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் என் மகன் விநாயகமூர்த்தி(29). இவர் நேற்று முன்தினம் இரவு வ. உ .சி பார்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார் .சாலையில் நிற்கிறாரே என்று பரிதாபத்துடன் அந்த நபருக்கு லிப்ட் கொடுத்து தனது பைக்கில் ஏற்றிச் சென்றார். வழியில் சிறுநீர் கழிப்பதற்காக தனது பைக்கை விநாயகமூர்த்தி நிறுத்தினர்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த மற்றொரு திருநங்கை ஒருவரும் லிப்ட் கேட்டுவந்த வாலிபரும விநாயகமூர்த்தி கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். மேலும் அவரிடமிருந்து விலை உயர்ந்த செல்போன் ஒன்றையும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து விநாயகமூர்த்தி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் .தொடர்ந்து நடத்திய விசாரணையில் விநாயகமூர்த்தி இடம் பணம் பறித்து ஈடுபட்ட ஈடுபட்டதாக போத்தனூர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சபீர் அலி என்பவரின் மகன் சுல்தான் (29) மற்றும் திருநங்கையான  அவரது மனைவி கீர்த்தனா என்கிற ரமேஷ் (28) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here