தீபாவளியின் போது அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து ள்ளது. தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். என்று நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் பசுமை பட்டாசு என்றால் என்ன? பாரம்பரிய வகை பட்டாசுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்விகள் எழுகிறது. ‘பசுமை பட்டாசு’ என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ‘நீரி’யின் (NEERI) கண்டு பிடிப்பு. இது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் வரும் அரசு நிறுவனம். பார்ப்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும் பசுமை பட்டாசு, வெடிக்கும் போது குறைவாகவே மாசுபடுத்தும்.
அப்போதைய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பாக பேசிய பிறகு, அவரது அறிவுறுத்தலின் பேரில் பசுமை பட்டாசு பற்றிய ஆராய்ச்சிகளை ‘நீரி’ தொடங்கியது. இந்நிலையில் விருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதில், நீரி அமைப்பின் இயக்குநர் ராகேஷ் குமார் மற்றும் மூத்த விஞ்ஞானி சாதனா ராயிலு ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் மூலம் நீரி அமைப்பு நல்ல முடிவை எடுத்ததால் இந்தியாவில் உள்ள ஒன்றரை கோடி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படும் என்றார்.















